கத்தாரில் Metrash2 அப்பிலீகேசன் மூலம் தேசிய முகவரி பதிவு..!!

Metrash2 அப்பிலீகேசன் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் MoI என்ற வலைத்தளம் மூலம் தேசிய முகவரியின் பதிவு 27 ஜனவரி 2020 முதல் தொடங்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் நேரடியாக MoI சேவை மையங்களில் பதிவு செய்யலாம்.

image credit : The peninsula Online

Metrash2-ல் கத்தார் ஐடி வைத்திருப்பவர் தகவல்களை நிரப்பும்போது, ​​அவர்களின் பராமரிப்பின்கீழ் உள்ள 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தானாகவே அதே முகவரியில் பதிவு செய்யப்படுவார்கள். ஆனால் மனைவி தனியாக பதிவு செய்ய வேண்டும்.

image credit : The peninsula Online

இதில் ஒருவர் தங்களின் வீட்டு முகவரி, தொலைபேசி எண், email முகவரி மற்றும் வேலைசெய்யும் இடத்தின் முகவரியை நிரப்ப வேண்டும். பதிவுசெய்ததும், பதிவுசெய்த விவரங்களுடன் குடியிருப்பாளர்கள் அதை உறுதிப்படுத்தும் வகையில் SMS பெறுவார்கள்.

image credit : The peninsula Online

தங்கள் முகவரியை ஆறு மாத காலத்திற்குள் அதாவது ஜூலை 26 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு உள்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

NEWS :The Peninsula Online