கத்தாரில் COVID-19 வழிகாட்டுதல்களை மீறிய உடற்பயிற்சி கிளப் மூடல்..!

Ministry closes fitness club for violating Covid-19 guidelines
Pic: Qatar Day

கத்தாரில் கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மீறியதற்காக அமைச்சகம் உடற்பயிற்சி கிளப் ஒன்றை மூடியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை மீறியதற்காக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MOCI) Gate மாலில் உள்ள உடற்பயிற்சி கிளப்பை 15 நாட்களுக்கு மூடியுள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் முதல் கேபிள் பாலம் திறப்பு..!!

இதுகுறித்து அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், West Bay-ல் உள்ள Gate மாலில் OxFitness LAB மீது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க
அமைச்சகம் முன்னர் வழங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…