கொரோனா விதிமீறல்; கத்தாரில் மூன்று கடைகளை மூடியது அமைச்சகம்.!

Ministry closes three stores
Pic: MoCI

கத்தாரில் COVID-19 முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மீறியதால் மூன்று வணிக கடைகளை மூடுவதற்கு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MoCI) உத்தரவிட்டுள்ளது.

Salwa தெருவில் அமைந்துள்ள Fast car washing, Al Duhail பகுதியில் உள்ள Anana Du Cafe மற்றும் Al Markhiya தெருவில் அமைந்துள்ள Fitwell Ladies Accessories போன்ற கடைகள் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மீறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டிற்கு மருத்துவ உதவிகளை வழங்கிய கத்தார்.!

வணிகக் கடைகளுக்கான பொதுவான மற்றும் சிறப்புத் தேவைகளை Fast car washing மற்றும் Anana Du Cafe கடைபிடிக்க தவறியதால் அபராதம் செலுத்தும் வரை இரு கடைகளையும் மூடுவதற்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், COVID-19 முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மீறியதால் Fitwell Ladies Accessories அபராதம் செலுத்தும் வரை கடையை மூடுவதற்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் வெளிநாட்டினர்கள் அதிகம் வேலை செய்யும் நாடுகளில் கத்தார் முதலிடம்.!

இது போன்ற மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆய்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்த உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பதிவு மற்றும் வணிக உரிமம் தொடர்பான ஏதேனும் மீறல்கள் அல்லது முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் மீறல்கள் குறித்து புகாரளிக்க  குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.