கத்தாரில், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு.!

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் முன்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உடல்நலத்தை பாதுகாப்பதற்காக, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MOCI) உணவகங்கள் மற்றும் கஃபேக்களின் (காபி கடைகள்) நடவடிக்கைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது.

வணிக இடத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை வழங்குவதற்கான அல்லது ஒப்படைக்கும் செயல்பாட்டை மீண்டும் தொடங்க உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மால்களில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும், அவை விநியோக ஆர்டர்களை செயல்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.

 

ஊழியர்களைப் பாதுகாப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து உணவகங்களும், கஃபேக்களும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் பொது சுகாதார அமைச்சகத்தின் கொள்கைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சகம் மேற்கண்ட முடிவில் கூறப்பட்டுள்ளதை மீறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த முடிவு 2020ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது‌.

Source: TPQ