கத்தார் தொழில்துறை பகுதியில், கிருமிநாசினி தெளிக்கும் பணி.!

Image Source : Screenshot from MME video

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) தொழில்துறை பகுதியில், தெரு 1 முதல் 32 வரையிலான 12 மில்லியன் சதுர மீட்டர் பகுதியில் இரண்டு நாட்களில்,  கிருமிநாசினி தெளிக்கும் பணியை முடித்துள்ளது.

இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணியானது, பொது சுகாதார அமைச்சகம் (MoPH), உள்நாட்டு பாதுகாப்பு படை (Lekhwiya) மற்றும் பொதுப்பணி ஆணையம் (Ashghal) ஆகியவற்றுடன் இணைந்து MME செயல்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது.

கிருமிநாசினி தெளிக்கும் பணியை பதிவு நேரத்தில் முடிக்க, 57 வாகனங்கள் மற்றும் 89 நபர்களைக் கொண்ட பத்து அணிகள் ஈடுபடுத்தப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

மேலும், நகராட்சிகள், இயந்திரத் துறை மற்றும் பொது தூய்மைத் துறை ஆகியவற்றின் சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து MME அனைத்து வளங்களையும் திரட்டி, செயல்பாட்டை வெற்றிகரமாகச் செய்துள்ளதாக கூறியுள்ளது.

கத்தாரில், COVID-19 பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ், தொழில்துறை பகுதியில் வசிப்பவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இது செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த செயல்பாட்டின், வீடியோ காட்சிகளைப் MME நேற்று (29-03-2020) தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.