கத்தாரில், பொது தூய்மை துறையின் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு.!

MME educates cleaners about preventive measures of COVID-19. Image Source : TPQ

பொது சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் நிர்வாக மேலாண்மை சேவைகள் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது தூய்மைத் துறையின் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு சொற்பொழிவை ஏற்பாடு செய்தது.

இதில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது சுகாதார அமைச்சகம் வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்து தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், MME இன் நிர்வாக சேவைகள் துறையின் இயக்குநர் முபாரக் அப்துல்லா அல் ஹஜ்ரி (Mubarak Abdullah Al Hajri) மற்றும் அமைச்சகத்தின் ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியானது அனைத்து ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான நகராட்சியின் அக்கறையின் கட்டமைப்பிற்குள் வருகிறது என்றும், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.