கத்தாரில் கட்டாய இடங்களில் முகக்கவசம் அணிய தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்; MOI

MoI reiterates Facemask
Pic: The Peninsula Qatar

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கட்டாயமான இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் முகக்கவசம் அணிய தவறினால் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் இந்திய தூதரகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு..!

கத்தாரில், கடந்த மூன்று நாட்களில் முகக்கவசம் அணிய தவறிய 400க்கும் அதிகமானோர் மீது உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் கோவிட்-19 இரண்டாம் அலை வருமா..? MoPH விளக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…