கத்தார் தேசிய முகவரியை Metrash 2 App அல்லது MOI வலைத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ளுங்கள்.!

Image Credits : TPQ

கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) நாட்டின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சட்டத்திற்குட்பட்ட பிற நபர்கள் உட்பட அனைத்து பொதுமக்களையும் தங்கள் கத்தார் தேசிய முகவரியை Metrash 2 App அல்லது MOI வலைத்தளம் மூலம் பதிவு செய்யுமாறு மீண்டும் ஒரு முறை நினைவூட்டியுள்ளது.

இந்த விண்ணப்ப படிவத்தில் கத்தாரில் குடியிருக்கும் முகவரி, லேண்ட்லைன் (Landline) மற்றும் தொலைபேசி எண், மின்னஞ்சல், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கான பணி முகவரி மற்றும் இதனுடன் தொடர்புடைய வேறு தகவல்களும் அடங்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், இந்த தகவலை பதிவு செய்வதற்கான செயல்முறை 2020 ஜூலை 26ஆம் தேதி வரை தொடரும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.