ஒரு காரில் இருவர் மட்டுமே; உள்துறை அமைச்சகம்‌ அறிவுறுத்தல்.!

கொரோனா வைரஸ் பரவலை குறைப்பதற்கும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாகவும், குடும்பங்களைத் தவிர ஏனைய தனியார் கார்களில் பயணம் மேற்கொள்ளுபவர்களின் எண்ணிக்கையை இரண்டு நபர்களுக்குள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் (MOI) வலியுறுத்தியுள்ளது.

கத்தாரில், COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்க அமைச்சகம் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.