COVID-19 : கத்தாரில் நேற்று புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி; ஒன்பது நோயாளிகள் குணம்.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 54 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 9 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார (MoPH) அமைச்சகம் ‌நேற்று (01-04-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 835ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்கள், கத்தார் திரும்பிய பயணிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், மற்றவர்கள் COVID-19 நோயால் கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய நோயாளிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.

குணமடைந்தோர்

கத்தாரில் நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் ஒன்பது நோயாளிகள் குணமடைந்துள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 71ஆக உள்ளது.

சோதனைகள்

கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 24,825 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.