கத்தாரில் ஹஜ் பெருநாள் காலத்தில் இறைச்சி கூடத்திற்கு செல்பவர்கள் பின்பற்ற வேண்டியவை.!

Pic: Abdul Basit / The Peninsula

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) ஹஜ் பெருநாள் காலத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஹஜ் பெருநாள் சமயத்தில்,
உங்களது மற்றும் பிறரின் பாதுகாப்பிற்காக வேண்டி, இறைச்சி வாங்குவதற்கு இறைச்சி கூடங்களுக்கு செல்லும்போது, ​​பின்வரும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று MoPH ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இறைச்சி கூடத்திற்கு செல்லும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளவை:

  • முகக்கவசம் அணிய வேண்டும்.
  • இறைச்சி கூடத்திற்கு கூட்டம் நெரிசலான நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • இறைச்சி கூடங்களில், அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும்.
  • 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்கவும்.
  • உங்களுக்கும், பிறர்க்கும் இடையில் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • இறைச்சி கூடத்திற்கு உங்களுக்கு வழங்கப்பட்ட சந்திப்பு நேரத்தில் செல்ல வேண்டும்.
  • கைகுலுக்குதல் மற்றும் பொருட்களை தொடுவதை தவிர்க்கவும்.
  • EHTERAZ பயன்பாடு செயல்படுத்தப்படுவதையும், பச்சை குறியீடு காண்பிக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
  • முடிந்தவரை பணத்திற்கு பதிலாக பண அட்டை மூலம் பணம் செலுத்துங்கள்.
  • காரில் இருந்து தேவையில்லாமல் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.