கத்தாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் வீடு திரும்பினர்..!

MoPH says four expats recover from coronavirus. Image Source : TPQ

கத்தாரில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் மீண்டுள்ளனர் என்று பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (14-03-2020) கூறியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, வீடு திரும்பியவர்கள் ஜோர்டான், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தொற்று நோய் மைய மருத்துவ இயக்குநர் டாக்டர் முனா அல் மஸ்லம்மணி (Communicable Disease Center Medical Director Dr Muna Al Maslamani) தெரிவித்துள்ளார். மேலும் அவர், தொற்று நோய்களுக்கான மையத்தில் உள்ள அனைத்து நோயாளிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்றும் கூறினார்.

மேலும், கத்தார் நாட்டில் கொரோனா வைரஸால் இறந்த வழக்குகள் எதுவும் இல்லை என்று MoPH- இன் பொது சுகாதார துறை இயக்குநர், ஷேக் டாக்டர் முகமது பின் ஹமாத் அல் தானி (Sheikh Dr Mohammed bin Hamad Al Thani) கூறியுள்ளார்.