கத்தாரில் 35,000 தன்னார்வலர்களுக்கு பொது சுகாதார அமைச்சகம் பயிற்சி.!

Sheikh Dr Mohamed bin Hamad al-Thani.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான கத்தார் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொது சுகாதார அமைச்சகம் (MoPH) 30,000 முதல் 35,000 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் ஷேக் டாக்டர் முஹம்மது பின் ஹமாத் அல் தானி (Sheikh Dr Mohamed bin Hamad al-Thani) அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு பணிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும், தேர்ச்சி பெறாதவர்கள் மேலதிக பயிற்சி பெறும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது அவர்களின் சொந்த பாதுகாப்பிற்கும், நியமிக்கப்பட்ட வேலையை திறம்பட மேற்கொள்ள உதவுவதற்கும் முக்கியமானது. வெவ்வேறு பின்னணியிலிருந்தும் கல்வி நிலைகளிலிருந்தும் அனைத்து தன்னார்வலர்களும் தேவைப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், சேவையைப் பற்றி ஆர்வத்துடனும் இருக்க வேண்டும் என்றார்.

COVID-19க்கு எதிரான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரின் கட்டுப்பாட்டால், கத்தாரின் நிலைமை மேம்படும் என்றார். மேலும், நான்கு வாரங்களுக்குள் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்துவதைக் காணலாம் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஷேக் டாக்டர் முஹம்மது பின் ஹமாத் அல் தானி நேற்று (05-06-2020) கத்தார் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.