இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கத்தாரில் வலுக்கும் எதிர்ப்பு.!

Muslims against COVID-19 cremations
Pic: KareemTime

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா (சடலத்தை) எரிப்பதற்கு எதிராக உலக நாடுகளில் எதிர்ப்புகள் வலுந்து வருகின்றன.

இஸ்லாமிய மதத்தின் பிரகாரம், இஸ்லாமியர்கள் இறந்த உடலை நல்லடக்கம் செய்வதே வழக்கமாக கொண்டுள்ள நிலையில், இலங்கையில் COVID-19 தொற்றால் உயிரிழந்த ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுகிறது.

கத்தார் துணை பிரதமர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.!

இத்தகைய சூழ்நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது குறித்து முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக உலக நாடுகளில் பல்வேறு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், கத்தாரிலும் பலர் கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் பிப்ரவரி 15, 2021 வரை நீட்டிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…