கத்தார் நாட்டில் திமுக புதிய கிளை திறப்பு..!

New branch opening for DMK in Qatar..!

கத்தார் தலைநகர் தோஹாவில் (11.01.2020) அன்று கத்தார் திமுக கூட்டம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சைதை மகேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

முதன்முறையாக வெளிநாடுகளில் செயல்படும் திமுகவின் அதிகாரப்பூர்வ முதல் கிளை அமைப்பாக திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

இந்த விழாவில், பொன்முடியிடம் கத்தார் திமுகவின் உறுப்பினர்கள் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய பொன்முடி, திமுகவின் கொள்கைகள் மற்றும் திமுக கடந்து வந்த பாதைகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது குறித்தும் பேசினார்.