கத்தார் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து பீதியடையவேண்டாம்..!!

Dr Mohamud Verjee (Image credit : The Peninsula)

கிட்டத்தட்ட 3,000 நபர்களுக்கு மேல் பரவி 80 உயிர்களைக் கொன்றுள்ள புதிய கொரோனா வைரஸைப் பற்றி கத்தார் மக்கள் பீதியடையவேண்டாம் என்று கத்தார் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சிகிச்சை மற்றும் மருந்து இல்லாத இந்த வைரஸ் சீனாவில் உள்ள Wuhan நகரத்தில் முதலில் தோன்றியது ஆனால் தற்போது தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தைவான், மலேசியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், நேபாளம் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 41 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் துல்லியமாக மதிப்பிடுவது கடினமாகும். மேலும், இந்த வைரஸால் மரணங்கள் நிகழ்ந்தாலும், இதைக்கண்டு கத்தார் மக்கள் அஞ்சவேண்டாம், இது விழிப்புடன் இருப்பதற்கான ஒரு நிகழ்வு மட்டுமே என்று கிளினிக்கில் மெடிஸினில் இணை பேராசிரியராக பணிபுரியும் டாக்டர்.முஹம்மது ஏ வெர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஆண்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களும், ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதிகமான காய்ச்சல் அதாவது 39 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்டவை , தொடர்ந்து வறட்டு இருமல், பின்னர் மூச்சுத் திணறல் இவையெல்லாம் வைரஸின் அறிகுறிகளாகும். இதன் அறிகுறிகள் இரண்டு நாட்களுக்குள் அல்லது 14 நாட்களுக்குப் பிறகு தோன்றும்.

இவ்வைரசை நாட்டிற்குள் கொண்டு வராமல் தடுக்க கத்தார் தொடர்ந்து முன்னெச்சரிக்கைகள் செய்துவருவதாக டாக்டர் வெர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்கள் தாங்களே எடுக்கக்கூடிய முன்னெச்சரிகைகளை பொறுத்தவரை, குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தினார். கழுவப்படாத கைகளால் அவர்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடக்கூடாது மற்றும் உடல்நிலை சரியில்லாத மற்றும் இருமல் அல்லது தும்மலுடன் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும் என்று டாக்டர் வெர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

NEWS : The Peninsula