கத்தாரில்‌ வரும் நாட்களில் வலுவான வடமேற்கு காற்று வீசக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை.!

Strong winds from tonight
Pic: @qatarweather

புதிய வலுவான வடமேற்கு காற்று வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை (டிசம்பர் 25, 26) மாலை வரை 12 முதல் 22 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும், சில பகுதிகளில், சில நேரங்களில் 30 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

முன்னறிவிக்கப்பட்ட வலுவான காற்று காரணமாக, சில பகுதிகளில் 3 கிலோமீட்டருக்கும் குறைவான தூசி காற்று மற்றும் குறைந்த தெரிவுநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

கத்தாரில் முகக்கவசம் அணிய தவறிய 124 பேர் மீது நடவடிக்கை.!

குறிப்பாக இரவு மற்றும் அதிகாலையில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் முன்னறிவிக்கப்பட்ட வானிலை காரணமாக, அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், அனைத்து கடல் நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் QMD வலியுறுத்தியுள்ளது.

கத்தார் வந்தடைந்தது COVID-19 தடுப்பு மருந்து; நாளை முதல் 7 சுகாதார மையங்களில் கிடைக்கும்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…