கத்தாரில் வடமேற்கு காற்றால் குளிர்ச்சி…

Northwestern wind gives a chill to Qatar residents.(image source:The peninsula)

கத்தாரில் நேற்றையதினம் Mesaieed மற்றும் Turayna போன்ற நகரங்களில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது அதேபோன்று தோஹாவிலும் 14 டிகிரியை எட்டியுள்ளது.

தொடர்ச்சியான வடமேற்கு காற்றின் காரணமாக எதிர்பாக்கப்பட்ட அளவைவிட வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளதாக கத்தார் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று மாலை 6 மணி வரை கடலோர பகுதிகளில் சில மேகங்களுடன் காணப்பட்டது,பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று எதிர்பார்க்கப்படும் என்று கத்தார் வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

கடல் அல்லாத பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் மழைபெய்யும் வாய்ப்புகளும் உள்ளது , முதலில் வடக்கு திசை பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.