கத்தாரில் முகக்கவசம் அணிய தவறிய 113 பேர் மீது நடவடிக்கை.!

not wearing masks
Pic: Abdul Basit/ The Peninsula

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (10-01-2021) முகக்கவசம் அணிய தவறியதற்காக 113 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

சவுதிக்குள் நுழைந்த கத்தார் வாகனங்கள்: ரோஜாக்களுடன் வரவேற்ற அதிகாரிகள்.‌!

கத்தாரில் தற்போது வரை முகக்கவசம் அணிய தவறிய 5,253 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 277 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தார், பஹ்ரைன் உறவுகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்; பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…