ஓமன் மன்னர் மரணம்; இந்திய, அமீரக அரசுகள் இரங்கல்..!

Oman king sulthan Qaboos passed away.(image source:Ktp news)

அரபு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சியாளரான சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (79) அவர்கள் நேற்று இரவு காலமானார். இவர் 50 ஆண்டுகள் வரை ஆட்சி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக குடல் புற்றுநோய் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1970-களில் இவரது தனது 29 ஆவது வயதில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்.

தனது திட்டங்களின் மூலம் ஓமானை முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.

மேலும், இந்த மறைவிற்கு இந்திய, அமீரக அரசுகள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓமன் நாட்டில் 4 .5 மில்லியன் மக்கள் வாழும் நிலையில் அடுத்த ஆட்சியாளர் யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.