COVID-19: கத்தாரில் இன்று ‌(செப் 20) மேலும் ஒருவர் பலி; புதிதாக 230 பேர் பாதிப்பு.!

Corona update Qatar Dec 17
Pic: iloveqatar.net

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணம், 230 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 214 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (20-09-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 123,376ஆக உள்ளது.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் ஏர்வேஸ் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!!

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று பதிவு செய்துள்ளது. தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 210ஆக உயர்ந்துள்ளது.

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 214 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,303ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 5,020 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 724,077 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் போக்குவரத்து வெள்ளிக்கிழமைகளில் பேருந்து சேவைகளை ரத்து செய்துள்ளது.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…