கத்தாரில் கொரோனா வைரஸிற்கு மேலும் ஒருவர் மரணம்.!

கத்தாரில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (10-05-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 14 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.

இறந்தவர், 54 வயதான கத்தார் குடியிருப்பாளர் என்றும், தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் மேலும், இவர் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.