கத்தாரில், தனிமைப்படுத்தல் மீறல்கள் தொடர்பாக 5000-க்கும் மேற்பட்ட அழைப்புகள்.!

கத்தாரில், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள், அமைச்சகத்தின் ஹெல்ப்லைனுக்கு தனிமைப்படுத்தல் மீறல்கள் தொடர்பாக 5,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், மார்ச் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை உள்ள காலப்பகுதியில், உள்துறை அமைச்சகத்திற்கு தனிமைப்படுத்தல் மீறல்கள் தொடர்பாக 5,598 அழைப்புகள் வந்துள்ளதாக அமைச்சகம் இன்று (29-03-2020) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் இணங்காத நபர்களை பதிவு செய்வதற்கும்,
ஹோட்டல் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கும், உள்துறை அமைச்சகம் 44579999 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

Source : TPQ