கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 867 டன்‌ உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!

867 tonnes local vegetables sales in Qatar
Pic: Twitter/MME

கத்தாரில் கடந்த ஜூலை மாதத்தில் கத்தார் பண்ணைகள் திட்டம் மற்றும் பிரீமியம் கத்தார் பண்ணைகள் திட்டம் ஆகியவற்றின் மூலம் சுமார் 867 டன் உள்ளூர் விளைந்த காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.

கத்தார் பண்ணைகள் திட்டம் மூலம் 624 டன் காய்கறிகளை விற்பனையாகி உள்ளது என்றும், பிரீமியம் கத்தார் பண்ணைகள் திட்டத்தின் மூலம் 243 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளது என்றும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் புதிய இந்திய தூதர் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.!

மேலும், உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் திட்டத்தை நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அல் மீரா (Al Meera), லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள் (Lulu Hypermarkets), குடும்ப உணவு மையம் (FFC), மற்றும் Carrefour போன்ற பல முக்கிய வர்த்தக நிலையங்களில் நடத்தி வருகிறது.

இந்த இரண்டு திட்டங்களும் உள்ளூர் பண்ணைகளில் விளைந்த பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வணிக விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக வழங்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms/

? Telegram https://t.me/tamilmicsetqatar