தோஹாவில் உள்ள இந்த பகுதி மூடப்படுவதாக பொதுப்பணி ஆணையம் அறிவிப்பு.!

Partial traffic closure
Pic: Ashghal

கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து, Al Mirqab ரவுண்டானாவிற்கும், Al-Koot Fort சந்திப்புக்கும் இடையில் உள்ள அலி பின் அப்துல்லா சந்திப்பின் (Ali Bin Abdullah intersection) ஒரு பாதை வருகின்ற (17-01-2021) ஞாயிற்றுக்கிழமை முதல் பகுதி அளவில் மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் திறப்பு…முன்பதிவு தொடக்கம்.!

தோஹா மத்திய வளர்ச்சி மற்றும் அழகுபடுத்தும் திட்டம் தொகுப்பு 3ன் கீழ், Grand Hamad தெரு மற்றும் அலி பின் அப்துல்லா தெருவில் விரிவாக்க மற்றும் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இந்த மூடல் செயல்படுத்தப்படுகிறது.

அலி பின் அப்துல்லா தெருவின் திசையை பயன்படுத்த விரும்பும் சாலை பயனர்கள், Grand Hamad தெருவில் U-Turn சந்திப்பின் மறுபக்கத்தை அடையலாம் என்றும், மாற்று சாலைகளைப் பயன்படுத்தி தங்கள் இடங்களை அடையலாம் என தெரிவித்துள்ளது.

கத்தார், எகிப்து இடையேயான வான்வெளி எல்லை மூன்று ஆண்டுக்கு பின் திறப்பு.!

இந்த மூடல் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் விதமாக சாலை அடையாளங்கள் நிறுவப்படும் என்றும், அனைத்து சாலை பயனர்களும் வேக வரம்பைக் கடைப்பிடிக்குமாறு பொதுப்பணி ஆணையம் (Ashghal) கேட்டுக்கொண்டுள்ளது.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…