கொரோனா விதிமீறல்: கத்தாரில் நேற்று 100 பேருக்கு மேல் நடவடிக்கை.!

peoples caught not wearing masks
Pic: The Peninsula Qatar

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் நேற்று (20-11-2020) முகக்கவசம் அணிய தவறிய 111 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

COVID-19: கத்தாரில் இன்று (நவ.21) புதிதாக 174 பேர் பாதிப்பு.!

ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இதுவரை முகக்கவசம் அணிய தவறிய 1,207 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 58 பேர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தார் தூதரகம் லைபீரியா நாட்டிற்கு மருத்துவ உதவிகள் வழங்கல்.!

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் வெளிநாட்டு ஊழியரின் மனிதநேய செயல் – பணிஉயர்வு மற்றும் பாராட்டு.!

Editor

சவூதி அரேபியா மற்றும் ஓமனிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் அறிவிப்பு.!

Editor

கத்தாரில் உள்ள FAHES வாகன சோதனை மையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது.!

Editor