கத்தாரில் முகக்கவசம் அணியாத 111 பேர் மீது நடவடிக்கை.!

Peoples Not wearing Facemask

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (09-12-2020) முகக்கவசம் அணிய தவறியதற்காக 111 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் உள்ளூரில் விளையும் காய்கறிகள் விற்பனை அதிகரிப்பு.!

கத்தாரில் தற்போது வரை முகக்கவசம் அணிய தவறிய 2,670 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 202 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தார் தேசிய தினம்: அமீருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…