கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில், 33 கி.மீ ஒலிம்பிக் சைக்கிள் பாதை திறப்பு..!

Qatar- 33km-long Olympic Cycling Track opens on Al Khor Road.

கத்தாரில் தேசிய விளையாட்டு தினத்தின் ஒரு பகுதியாக, 33 கி.மீ நீளமான ஒலிம்பிக் சைக்கிள் பாதையை கத்தாரின் பிரதமரும், உள்துறை அமைச்சருமான (Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani) அவர்கள் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க : கத்தாரில் தேசிய விளையாட்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாட்டம்.!

பொதுப் பணி ஆணையம் (Ashghal), அல்கோர் பாதையில் நிர்மாணிக்கப்பட்ட ஒலிம்பிக் சைக்கிள் பாதையானது, 7 மீட்டர் அகலத்தில் 33 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. இதில், ஐந்து பாலங்களும், 29 சுரங்கங்களும் இந்த ஓடுபாதையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒலிம்பிக் சைக்கிள் பாதையானது ஒரு மணி நேரத்திற்கு 50 கி.மீ வரை வேகத்தை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,

மேலும், இந்த ஒலிம்பிக் சைக்கிள் பாதையை பயன்படுத்துபவர்களின் நலன் கருதி, கத்தார் பல்கலைக்கழகம், லுசெயில் நிலையம், லுசைல் இன்டர்நேஷனல் சர்க்யூட், செமைஸ்மா இன்டர்சேஞ்ச் மற்றும் அல் பேட் ஸ்டேடியம் ஆகிய ஐந்து இடங்களில் கார் பார்க்கிங் வசதியும், மேலும் இரவு நேரங்களில் பயன்படுத்துபவர் வசதிக்காக 1450 மின் கம்பங்களையும் அஷ்கல் (Ashghal) வழங்கியுள்ளது.