சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் ஏர்வேஸ் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!!

Qatar Airways flies essential supplies to Sudan
Pic: Twitter/Qatar Airways

கத்தார் நாட்டிற்கு சொந்தமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அன்று சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.

இந்த அத்தியாவசிய பொருட்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து சூடான் தலைநகர் Khartoum-க்கு இலவசமாக கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானம் (QR8792) மூலம் அனுப்பப்பட்டதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அமீர் 50 மில்லியன் ரியால் நன்கொடை.!

மேலும், கத்தார் ஏர்வேஸ் வழங்கிய இந்த நன்கொடைகள் கத்தார் அறக்கட்டளை (Qatar Charity) மூலம் சூடான் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கத்தார் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.

Pic: Qatar airways

கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி HE Akbar al-Baker, கத்தார் நாட்டிற்கான சூடான் தூதர் Abdulrahim al-Sediq, கத்தார் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி Yousef bin Ahmed al-Kuwari மற்றும் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் தலைமை இயக்க அதிகாரி Badr al-Meer ஆகியோர் இந்த விமானத்தை அனுப்பும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 6 பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…