முடிவுக்கு வந்தது 3 ஆண்டுகால தடை; கத்தாரிலிருந்து சவுதிக்கு முதல் விமானம் புறப்பட்டது.!

Qatar airways flight takeoff
Pic: Qatar Airways

கத்தாரில் இருந்து சவுதி அரேபியாவுக்கு முதல் நேரடி விமானம் இன்று பிற்பகல் 2:05 மணிக்கு ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கத்தார் ஏர்வேஸ் QR 1164 Boeing 787-8 விமானம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் ஹாலித் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

சவுதியில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் காணொளியை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளது. 2017ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர், கத்தாரில் இருந்து சவுதிக்கு செல்லும் முதல் விமானம் இதுவாகும்.

இதேபோல், சவுதி அரேபியா விமான நிறுவனமான Saudia ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் ஜித்தாவில் இருந்து தோஹாவுக்கு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

ஜனவரி 11, 2021: கத்தாரில் இன்றைய கொரோனா நிலவரம்.!

ரியாத்தில் இருந்து வாரந்தோறும் 4 விமானங்களும், ஜித்தாவிலிருந்து வாரந்தோறும் 3 விமானங்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் இருந்து முதல் விமானம் இன்று (11-01-2021) மாலை தோஹாவில் தரையிறங்கும்.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…