FIFA உலகக் கோப்பை: பிரத்தியேகமான கத்தார் ஏர்வேஸ் விமானம்.!

Qatar Airways Flight
Pic: Qatar airways

கத்தார் நாட்டில் வருகின்ற 2022ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருக்கின்றது. இதனை முன்னிட்டு, கத்தார் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் அதன் விமானம் ஒன்றில் பிரத்தியேகமான விளம்பர அடையாளத்தை ஒட்டியுள்ளது.

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் சரியாக இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், விமானத்திற்கு தற்போது புதிய விளம்பரம் போடப்பட்டிருப்பதாகக் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.

FIFA 2022 உலகக்கோப்பை: மாஸ் காட்டும் கத்தார்…இன்னும் இரண்டே வருடங்களில்.!

இந்த புதிய விளம்பரம் கொண்ட விமானம் கத்தார் தலைநகர் தோஹா – ஜூரிக் இடையே பயண சேவைகளை வழங்கும்.

வருகின்ற நாட்களில் மேலும் பல விமானங்கள் மீது உலகக் கோப்பை போட்டி விளம்பரங்கள் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் நடைபெறும் போட்டியை நேரடியாகக் காண உலகம் முழுவதிலுமிருந்து அதிக அளவில் ரசிகர்கள் கத்தார் வருவார்கள் என்பதால் கத்தாரில் சிறப்பான ஏற்பாடுகள்
நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கத்தார் இந்திய தூதரகம் பாஸ்போர்ட் சேவைகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…