கத்தார் அமீர் அவர்கள் குவைத் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார்.!

Qatar Amir sends written message to Kuwait Amir
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (14-10-2020) குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உண்டான வழிகள் குறித்த எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார்.

கத்தார் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அவர்கள் நேற்று குவைத் அமீருடான சந்திப்பின் போது இந்த எழுத்துப்பூர்வ செய்தியை வழங்கினார்.

இதையும் படிங்க: கத்தாரில் குளிர்கால சந்தைகள் இந்த மாத இறுதியில் தொடக்கம்.!

இந்த சந்திப்பின் தொடக்கத்தில், கத்தார் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அவர்கள் கத்தார் அமீரின் வாழ்த்துக்களை குவைத் அமீருக்கு தெரிவித்தார்.

குவைத் அமீர் அவர்கள் கத்தார் துணை பிரதமரிடம், கத்தார் அமீர் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்தினார்.

மேலும், கத்தார் நாட்டு மக்கள் மேன்மேலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…