COVID-19 : கத்தாரில் புதிதாக 114 பேருக்கு பாதிப்பு; மொத்தம் 949ஆக உயர்வு.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மூன்றாவதாக ஏற்பட்ட மரணம், 114 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த ஒரு நோயாளி ஆகியவற்றை பொது சுகாதார (MoPH) அமைச்சகம் ‌நேற்று (02-04-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 949ஆக உயர்ந்துள்ளது.
புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்கள், கத்தார் திரும்பிய பயணிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், மற்றவர்கள் COVID-19 நோயால் கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.
குணமடைந்தோர்

கத்தாரில் நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 72ஆக உள்ளது.
மரணங்கள்

கத்தாரில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மூன்றாவது மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் நேற்று பதிவு செய்துள்ளது.

இறந்தவர், கடுமையான நிமோனியாவால் (Pneumonia) பாதிக்கப்பட்ட 85 வயதான குடியிருப்பாளர் என்றும், அவருக்கு தொற்று கண்டறியப்பட்ட உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், உடனடியாக அவருக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது என்றும் MoPH கூறியுள்ளது. மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சகம் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.
சோதனைகள்

கொரோனா வைரஸை கண்டறிய நேற்று மட்டும் 1,435 பேருக்கு சோதனைகளை நடத்தியுள்ளதாகவும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 26,260 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், புதிய ஆய்வக நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தினசரி அதிக எண்ணிக்கையிலான சோதனைகளுக்கு தொடர்ந்து பங்களிக்கிறது என தெரிவித்துள்ளது.