கத்தார் அமீர் புதிய பிரதமரை அறிவித்தார்..!

Qatar New prime minister sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al-Thani.

கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நாட்டின் புதிய பிரதமரை நியமித்துள்ளார் என்று கத்தார் அமீர் அலுவலகம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

கத்தாரில் பிரதமராக இருந்த ஷெய்க் அப்துல்லா பின் நாஸர் பின் கலீபா அல் தானி அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் போன்ற பதவிகளை இராஜினாமா செய்துள்ளார். இந்த இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள கத்தார் அமீர், ஷெய்க் காலித் பின் கலீபா பின் அப்துல் அஸீஸ் அல் தானி அவர்களை கத்தார் நாட்டிற்கான புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

அதன்படி, கத்தாரின் புதிய பிரதமராகவும் மற்றும் உள்துறை அமைச்சராகவும் ஷெய்க் காலித் பின் கலீபா பின் அப்துல் அஸீஸ் அல் தானி (Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al-Thani ) அவர்கள் நியமிக்கப்பட்டு்ள்ளார்.

கத்தார் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து பீதியடையவேண்டாம்..!!

ஷெய்க் காலித் பின் கலீபா பின் அப்துல் அஸீஸ் அல் தானி அவர்கள் கத்தாரின் புதிய பிரதமர் மந்திரிகள் சபையின் முக்கிய பிரதானியாக இதுவரை காலமும் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் சர்வதேச 2022 FIFA உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு தயாராகி வருவதால், இந்த மாற்றம் வந்துள்ளது என்றும் மேலும், இது பொருளாதாரத்தையும் சர்வதேச செல்வாக்கையும் உயர்த்தும் என்று நம்புகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.