கத்தாரில் உள்ள ஏடிஎம்களில் புழக்கத்தில் வந்த புதிய கத்தார் ரியால் நோட்டுகள்.!

Qatar ATMs issuing banknotes
Pic: Abdul Basit / The Peninsula

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு, இன்று (18-12-2020) கத்தாரில் உள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் புதிய கத்தார் ரியால் நோட்டுகளை வெளியிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கத்தார் மத்திய வங்கி புதிதாக 200 ரியால் மதிப்புள்ள நோட்டுகள் அறிமுகப்படுத்தியதோடு, அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் புதிய வடிவமைப்புகளுடன் அறிமுகப்படுத்தியது.

கத்தார் தேசிய தினம்: புதிய கத்தார் ரியால் நோட்டுகளை வெளியிட்டது மத்திய வங்கி.!

இந்த புதிய ரூபாய் நோட்டுகளில், 64 அதிநவீன பாதுகாப்பு விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகளின் முன்பக்கத்தில், பாரம்பரிய வடிவியல் வடிவங்கள், கத்தாரின் கொடி, கத்தாரின் தாவரங்கள் மற்றும் வரலாற்று கட்டிடக்கலையை உணர்த்தும் படங்கள் இடம்பெற்றுள்ளன.

கத்தாரின் பாரம்பரியம், இஸ்லாமிய வரலாறு, கலாச்சாரம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், கல்வி, விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தின் முன்னேற்றம் போன்றவற்றை பிரதிபலிக்கும் கருப்பொருள்கள் ரூபாய் நோட்டுகளின் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

கத்தார் தேசிய தினம்: வான வேடிக்கைகளுடன் ட்ரோன் நிகழ்ச்சியும் ஏற்பாடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…