கத்தார், பஹ்ரைன் உறவுகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்; பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்.!

Qatar Bahrain Relationship
Pics: Reuters

கத்தார் உடனான உறவுகள் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 5ம் தேதிக்கு முன்னர் இருந்தது போன்று இயல்பு நிலைக்குத் திரும்பும் என‌ பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் நேற்று (08-01-2021) தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் Dr Abdul Latif Al Zayani அவர்கள் பஹ்ரைன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அல் உலா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு வாரத்திற்குள் இது செயல்படுத்தப்படும் என்றும், அனைத்து சர்ச்சைகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கத்தார், சவுதி இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்..!

கட்சிகள், பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரச்சினைகளை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் வெளிப்படுத்தினார்.

ஒப்புக் கொள்ளப்பட்டதைச் செயல்படுத்த இரண்டு பின்தொடர் குழுக்கள் மற்றும் ஒரு சட்டக்குழு அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், உச்சிமாநாட்டின் இறுதி அறிக்கையில் முதல் முறையாக நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டதாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

வளைகுடா நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வரவேற்ற இந்தியா.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…