பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அறக்கட்டளை நிவாரண உதவி.!

Qatar Charity delivers aid
Pic: AlSharq Portal

கத்தார் அறக்கட்டளை பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட Sindh மற்றும் Baluchistan மாகாணங்களில் நிவாரண உதவிகளை வழங்கியது.

வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு இருப்பிடம் வழங்க 170 கூடாரங்களும் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க 1200 சுகாதார கருவிகளை வழங்கியுள்ளது.

கத்தார் இந்திய தூதரகம் பாஸ்போர்ட் சேவைகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு.!

கத்தார் அறக்கட்டளை நிவாரண உதவிகளை வழங்கும் போது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகளான அனாதைகள், பெண் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் ஏழ்மையான குடும்பங்களை கவனம் செலுத்தியுள்ளது.

இந்த வெள்ளத்தால் வீடுகள், கால்நடைகள் போன்றவற்றை இழந்தபோது சரியான நேரத்தில் ஆதரவு வழங்கிய கத்தார் நன்கொடையாளர்களுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் இன்று ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை.!

கத்தார் அறக்கட்டளையின் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை அங்கீகரித்து பாக்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கெளரவித்துள்ளது.

கத்தார் அறக்கட்டளை இதற்கு முன்னர் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…