கத்தாரில், 900 தொழிலாளர்களுக்கு சுகாதார கருவிகள் விநியோகம்..!

Qatar Charity distributes 900 health kits to workers in Lusail.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கத்தார் தொண்டு (QC), நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், லுசைல் (Lusail) பகுதியில் உள்ள 900 தொழிலாளர்களுக்கு சுகாதார கருவிகளை விநியோகித்தது.

கத்தார் நிர்வாக மேம்பாட்டு அமைச்சகத்தின் பல அதிகாரிகள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் முன்னிலையில், சுகாதார கருவிகள் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகத்தின் பொது ஆய்வுத் துறையின் இயக்குநர் பஹத் ஜாபர் அல்-தோசரி (Fahad Zafer al-Dosari) பங்கேற்றார்.