வியன்னாவில் நடந்த துப்பாக்கிச் சூடு: கத்தார் கடும் கண்டனம்..!

Qatar condemns shooting incident
Pic: REUTERS/Radovan Stoklasa

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில், இரண்டு பேர் பலியான நிலையில், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல் என்று ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ் கூறியுள்ளார், இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கத்தார் நாட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை; கத்தார் அமீர் அழைப்பு.!

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கத்தார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதில் கத்தாரின் உறுதியான நிலைப்பாட்டை கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கும், ஆஸ்திரியா மக்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் கத்தார் தனது இரங்கலை தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கூறியுள்ளது.

பிரான்ஸைத் தொடர்ந்து சவுதியிலும் தாக்குதல் – கத்தார் கடும் கண்டனம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…