காசாவில் தனிமைப்படுத்தப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து உதவி வழங்கும் கத்தார்.!

Aid provided by Qatar’s Gaza Reconstruction Committee for Palestinians.

கத்தாரின் காசா புனரமைப்புக் குழுவின் தூதர் முஹம்மது அல்-எமாடி அவர்கள் கத்தார் அபிவிருத்திக்கான நிதியத்துடன் இணைந்து, காசாவின் சுகாதார தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்துவருவதாக கூறியுள்ளார்.

அடிப்படை மின்னணு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் தவிர, தனிமையில் இருப்பவர்களுக்கு தினசரி உணவு மற்றும் தண்ணீரை வழங்குவதாகவும், அதுமட்டுமில்லாமல் இந்த குழு தனிமைப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும், உணவில்லாமல் இருப்பவர்களுக்கும் உணவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தூதர் அல்-எமாடி அவர்கள் கூறுகையில், நேற்று முன்தினம் நிலவரப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 100 டாலர் வீதம் 1,00,000 ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், பணத்தைப் பெறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பரவிவரும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பராமரிப்பதற்கும் ஒரு புதிய நெறிமுறையைப் பயன்படுத்தி கடந்த இரண்டு வாரங்களாக நிதிஉதவி வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Source : Gulf Times.