கத்தாரில் உப்பு பாக்கெட்டுகளுக்குள்‌ மறைத்து புகையிலை பொருட்கள் கடத்த முயற்சி..!

Qatar customs seizes tambaku
Pic: TPQ

கத்தார் நாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தும் முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் ட்வீட்டர் பதிவில், ஹமாத் துறைமுகத்தில் (Hamad Port) 274 உப்பு பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற பெரிய அளவிலான புகையிலை பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: இஸ்லாத்திற்கு எதிரான விரோதப்போக்கு பொருளாதார உறவுகளில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்; Qatar chamber எச்சரிக்கை.!

மேலும், அதிகாரிகள் பறிமுதல் செய்த இந்த புகையிலை பொருட்களின் மொத்த எடை 1,644 கிலோ என்று சுங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் குளிர்கால காய்கறி சந்தைகள் இன்று முதல் தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…