கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற போதை பொருள்கள் பறிமுதல்.!

Qatar Customs seizes
Pic: Qatar Customs

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட cocaine மற்றும் heroin போதை பொருள்கள் கடத்தும் முயற்சியை ஏர் கார்கோ மற்றும் தனியார் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், பார்சல் ஒன்றில் பெண்கள் பயன்படுத்தும் பை மற்றும் ஷூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ cocaine மற்றும் 70 கிராம் heroin ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து கத்தாருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்.!

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோஹாவில் உள்ள இந்த வீதி மூன்று மாதத்திற்கு மூடல்.!