பாகிஸ்தான் நாட்டிற்கு கத்தார் தூதரகம் மருத்துவ உதவிகள் வழங்கல்.!

Qatar delivers medical aid Pakistan
Qatar delivers medical aid Pakistan. Pic: QNA

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் நாட்டிற்கு கத்தார் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.

கத்தார் தொண்டு (Qatar Charity) நிறுவனம் வழங்கிய இந்த மருத்துவ உதவிகளை பாகிஸ்தானில் உள்ள கத்தார் தூதரகம் பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 10 பேர் கைது‌.!

இந்த மருத்துவ உதவிகளை பாகிஸ்தானின் கத்தார் தூதர் Sheikh Saoud bin Abdulrahman Al-Thani அவர்கள் பாகிஸ்தான் விமானப்படை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மேஜர் ஜெனரல் Safdar Abbas அவர்களிடம் வழங்கினார்.

இந்த தொற்றுநோய் காலத்தில் கத்தார் நாட்டின் தொடர்ச்சியான ஆதரவிற்கு பாகிஸ்தான் விமானப்படை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கத்தார்  நாட்டிற்கு நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வில் கத்தார் இராணுவ இணைப்பில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் தூதர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…