ஆசிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிய கத்தார் தொண்டு நிறுவனம்.!

Qatar distributes food parcels
Pic:qatar charity

கொரோனா வைரஸ் (COVID-19) காரணமாக பாதிக்கப்பட்ட கத்தாரில் வசிக்கும் ஆசிய வெளிநாட்டுக் குடும்பங்களுக்கு கத்தார் தொண்டு (Qatar Charity) நிறுவனம் உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளது.

ஆறு சமூகங்களைச் சேர்ந்த 236 குடும்பங்களுக்கு 800 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

கத்தாரில் இந்த வார வானிலை நிலவரம்.!

கத்தார் தொண்டு நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என கத்தார் தொண்டு நிறுவனத்தின் திட்ட மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் Jassim Al-Emadi குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கத்தார் முழுவதும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு பொருட்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களை கத்தார் தொண்டு நிறுவனம் விநியோகித்துள்ளது.

கத்தாரில் விரைவாக நடைபெறும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

கத்தார் தொண்டு நிறுவனம் மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதில் முனைப்புடன் செயல்படுவதாகவும், கத்தாரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவரான Iman Al-Kaabi தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் காலகட்டத்தில் சுமார் 13,262 உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆசிய, அரபு மற்றும் ஆப்பிரிக்க சமூகங்களைச் சேர்ந்த 53,048 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…