மத்திய கிழக்கில் வெளிநாட்டினர்கள் அதிகம் வேலை செய்யும் நாடுகளில் கத்தார் முதலிடம்.!

Qatar first Middle East
Pic: Qatar Day

HSBC Expat-ன் 2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வாழ்வதற்கும் மற்றும் வேலை செய்வதற்கும் உலகின் முதல் 10 நாடுகளில் கத்தார் இடம்பெற்றுள்ளது. மேலும் மத்திய கிழக்கில் முதலிடத்தை கத்தார் பிடித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில், உலகளவில் கத்தார் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும், அமீரகம் பதினான்காம் இடத்திலும், பஹ்ரைன் பதினைந்தாம் இடத்திலும் மற்றும் சவுதி அரேபியா பத்தொன்பதாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளது.

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்ற தோஹா.!

இந்த பட்டியலில் நியூசிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா, Netherlands மற்றும் Ireland ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.

மேலும், வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் வாழ்க்கை குறித்த தனித்துவமான நுண்ணறிவுகளை சேகரிக்க கிட்டத்தட்ட 20,000 வெளிநாட்டு நிபுணர்களிடம் வருடாந்திர ஆய்வு நடத்தியுள்ளதாக HSBC Expat-ன் தலைவர் John Goddard இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா: பணியிடங்களில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வெளியீடு.!