கத்தார் நாட்டின் வெளியுறவு மந்திரி ஈரான் வருகை…!

Qatar foreign minister to visit Iran

ஈரானிய நாட்டின் வெளியுறவு மந்திரி ஜவாத் ஸரீஃப் (javad zarif) அவர்கள் சனிக்கிழமை அன்று தெஹ்ரானில் தனது கத்தார் நாட்டின் பிரதிநிதியான முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக IRNA செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஈராக்கில் U.S ட்ரோன் (drone) வான்வழித் தாக்குதலில் ஈரானிய உயர் தளபதியான Qasem Soleimani கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமை அன்று ஈரானிய தலைநகருக்கு கத்தார் நாட்டின் தூதர் வந்தடைந்தார்.

ஜரீஃப் மற்றும் அப்துல்ரஹ்மான் ஆகிய இருவரும் எந்த ஒரு விபரங்களையும் சொல்லாமல் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக IRNA தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி அவர்கள் கத்தார் அமைச்சரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து கத்தார் அதிகாரிகளிடமிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஈரானின் புரட்சிகர காவலர்களின் குட்ஸ் படையின் (Quds force) தலைவரான Soleimani அவர்கள் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வெளியே வைத்து U.S. ட்ரோன் ஒன்று வாகனத்தை தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு soleimani அவர்களுக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த கவுரவத்தை வழங்கிய ஈரானிய தலைவர் அலி கமேனி(Ali Khamenei) அவர்கள் அவர் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக இருப்பதாக “கடுமையான பதிலடி” அளித்தார்.

பாக்தாத்தில் உள்ள U.S. தூதரக வளாகத்தின் மீது soleimani அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், மேலும் ஈராக் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள U.S. தூதர்கள் மற்றும் சேவை உறுப்பினர்கள் மீதும் கூடுதல் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது.

சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் மற்றும் ஈராக்கையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முடிவற்ற வன்முறைக்கு இழுப்பதைத் தவிர்க்கவும் என்று வெள்ளிக்கிழமை அன்று அனைத்து தரப்பினருக்கும் கத்தார் அறிவித்துள்ளது.