கத்தார் வரும் பயணிகளின் கவனத்திற்கு: இனி தனிமைப்படுத்தல் கட்டாயம்.!

Qatar hotel quarantine compulsory
Pic: File/The peninsula

குறைந்த ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தவிர்த்து கத்தார் வரும் அனைத்து பயணிகளுக்கும் நாளை (14-02-2021) முதல் ஹோட்டல் தனிமைப்படுத்தல் இருந்து விதிவிலக்கு இல்லை என பொது சுகாதார அமைச்சகம் (MoPH) ட்வீட்டரில் அறிவித்துள்ளது.

இந்த முடிவு பயணத்திற்கு முன் ஹோட்டல் தனிமைப்படுத்தல் இருந்து விதிவிலக்கு பெற்றவர்களையும், கத்தார் நாட்டிற்குள் நுழையும் பார்வையாளர்களையும் பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

மேலும், பசுமை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கத்தார் திரும்புவதற்கும் மற்றும் தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொள்கையையும் பொது சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

இந்த முடிவுகளை அமைச்சகம் மதிப்பாய்வு செய்து கத்தார் மற்றும் உலகின் பிற பகுதிகளிலுள்ள பொது சுகாதாரத்தின் அடிப்படையில் பொருத்தமான இடங்களில் அவற்றை புதுப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 7 பேர் கைது‌.!