கத்தாரில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து தூதர் விவாதம்.!

Qatar Indian Ambassador met Assistant Foreign Minister of Qatar
Pic: Twitter/India In Qatar

கத்தாரின் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தீபக் மிட்டல் (Dr Deepak Mittal) அவர்கள் கத்தார் உதவி வெளியுறவு அமைச்சர், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக் குழுவின் செய்தித் தொடர்பாளர் H.E. Lolwah Rashid Al-Khater அவர்களை நேற்று (02-09-2020) சந்தித்தார்.

இந்த சந்திப்பில், நெருக்கமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும், COVID-19 தொற்றுநோய் மற்றும் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் குறித்த நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 8 பேர் கைது‌.!

முன்னதாக கத்தார் இந்திய தூதர் கடந்த வியாழக்கிழமை (27-08-2020) அன்று கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சர் HE Yousuf Mohamed Al Othman Fakhroo அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இந்தியா, கத்தார் இடையேயான பொதுவான அக்கறை மற்றும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கத்தார் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  Facebook

 Twitter

 Instagram