கத்தார் தொழில்துறை பகுதியில் புதிய மேம்படுத்தும் பணி தொடக்கம்.!

Qatar Industrial Area
Pic: Twitter/Ashghal

கத்தாரில் உள்ள தொழில்துறை பகுதியின் 33ம் வீதியை ஐந்து கி.மீ நீளமுள்ள அதிவேக நெடுஞ்சாலையாக மாற்ற பொதுப்பணித்துறை ஆணையம் (Ashghal) தொடங்கியுள்ளது.

இந்த வீதி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 16,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளிலிருந்து நான்கு பாதைகளாக விரிவுபடுத்தப்படும்.

FIFA 2022 உலகக்கோப்பை: மாஸ் காட்டும் கத்தார்…இன்னும் இரண்டே வருடங்களில்.!

இந்த 33ம் வீதி தொழில்துறை பகுதியின் கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாகும்.

தொழில்துறை பகுதியின் 33ம் வீதியை அதிவேக சாலையாக மாற்றம் செய்வதால் பயண நேரம் குறைந்து ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த 33ம் வீதியை மேம்படுத்தும் திட்டத்தில் மின்சாரம், தகவல் தொடர்புகள், சுத்தீகரிக்கப்பட்ட நீர் இணைப்புகள், வடிகால் வலையமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் வலையமைப்பு போன்றவை அமைக்கப்படும்.

மேலும், பொதுப்பணித்துறை ஆணையம் தொழில்துறை பகுதிலுள்ள 33ம் வீதியை மேம்படுத்தும் பணியை 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

லெபனான் சுதந்திர தினம்; கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…