கத்தாரில் இந்த ஆண்டு இறுதி அல்லது 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் COVID-19 தடுப்பூசிகளைப் பெற முடியும்.!

Qatar likely receive Covid-19 vaccines
Pic: MoPH

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள COVID-19 தடுப்பூசியை உருவாக்கி சோதனை செய்வதில் பெரும் முன்னேற்றம் காணப்படுவதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் அறிவிப்பை மிகவும் நம்பிக்கைக்குரியதாக பொது சுகாதார அமைச்சகம் கருதுகிறது.

தடுப்பூசியின் ஆரம்ப பகுப்பாய்வு 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை கொரோனா தொற்றிலிருந்து தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 1,161 டன் உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!

இந்த சோதனை நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறந்ததாக அமைந்துள்ளது என்று ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனம் கூறியுள்ளது. இச்செய்தி இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை தருகிறது.

இந்த ஆய்வு ஆரம்ப முடிவு என்றும், தடுப்பூசியின் செயல்திறனை உறுதி செய்ய தற்போதைய மருத்துவ பரிசோதனைகளின் கூடுதல் முடிவுகள் தேவை என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாங்கள் கோடைகாலத்திலிருந்து ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று COVID-19 தொடர்பான தேசிய சுகாதார மூலோபாயக் குழுவின் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்களின் தலைவருமான Dr. Abdullatif Al Khal தெரிவித்துள்ளார்.

கத்தாரில் இந்த வாரம் ஈரப்பதமான வானிலை நிலவும்; வானிலை ஆய்வுத்துறை.!

மேலும், இந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்தால் கத்தார் இந்தாண்டு இறுதிக்குள் அல்லது 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…